செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (07:48 IST)

அதையும் கண்டிக்கின்றோம், இதையும் கண்டிக்கின்றோம்: பாஜக பிரமுகர் டுவிட்

அதையும் கண்டிக்கின்றோம், இதையும் கண்டிக்கின்றோம்: பாஜக பிரமுகர் டுவிட்
கர்நாடக அரசு கடந்த சில மாதங்களாக மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறிவரும் நிலையில் அந்த அணையை கட்ட விடமாட்டோம் என தமிழக அரசு பதிலடி கொடுத்து வருகிறது
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கர்நாடக அரசு, அரசியல் சட்டத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்படி அந்த அணை கட்ட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அந்த அணை கட்டுவதற்கு தடை விதித்தும் அதையும் மீறி கட்டுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது டுவிட்டரில் பதிலளிக்கையில் காவிரி விவகாரத்தில் நீங்கள் சொல்வது சரிதான். கர்நாடக அரசை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் நீட் விஷயத்தில் நீங்கள் அதையே தான் செய்கிறீர்கள்.  இதையும் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் அவருடைய இந்த டுவிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது