திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இணைப்பு

rajini
திமுகவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் இணைப்பு
Mahendran| Last Modified திங்கள், 26 ஜூலை 2021 (21:55 IST)
சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை ரஜினிகாந்த் கலைத்த நிலையில் அந்த மன்றத்தில் நிர்வாகிகளாக இருந்தவர்கள் சிலர் திமுகாவின் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளாக இருந்தவர்கள் 8 பேர்கள் திமுகவில் இணைந்தனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் திமுகவில் இணைந்தனர் என்றும் அவர்களில் 3 பேர் மாவட்ட செயலாளர்களாகவும் மற்றவர்கள் மகளிரணி வர்த்தக அணி வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞர் அணி செயலாளராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திமுக வந்துள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு விரைவில் பதவிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இதில் மேலும் படிக்கவும் :