1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:04 IST)

பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிக்க யாரும் இல்லை: நாஞ்சில் சம்பத் தடாலடி!

டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் சிறந்த பேச்சாளர். மனதில் பட்டதை அதிரடியாக பேசக்கூடியவர். இவர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சசிகலா அணியில் தினகரனுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.
 
எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியினரை கடுமையாக விமர்சிக்கும் நாஞ்சில் சம்பத் மத்தியில் உள்ள பாஜகவையும் விட்டுவைக்காமல் சகட்டு மேனிக்கு விமர்சிப்பவர். காரணம் பாஜக தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு பின்னணியில் இருப்பதால்.
 
இந்நிலையில் பிரபல தமிழ் வார இதழ் ஒன்றின் இணையத்துக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத்திடம் பாஜக ஓபிஎஸ், ஈபிஎஸ்-ஐ கழற்றிவிட்டுவிட்டு சசிகலா அணியுடன் இணக்கமாக செல்ல முயற்சிப்பதாக செய்தி வருவதாக கேள்வி எழுப்பியது.
 
இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், இந்த செய்திக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பது தெரியாது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. தமிழகத்தில் காலூன்ற பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளது.
 
ராஜஸ்தான், வங்காளம் இடைத்தேர்தலில் கோட்டை விட்ட பாஜக தனது சொந்த கோட்டையையே காவு கொடுக்கும் நிலைமையில் உள்ளது. அனைத்து தரப்பு எதிர்ப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெற்றுள்ள பாஜகவுக்கு பட்டுப்பாவாடை விரிப்பதற்கு பந்தமிழ் நாட்டில் யாரும் தயாராக இல்லை என்றார்.