திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2018 (15:39 IST)

விஜயகாந்தை தேடிச்சென்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் தேடிச்சென்று ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.
 
ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர். ஆனால் திடீரென தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட ஜீயர் வைரமுத்துவுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 
இதனையடுத்து தனது சோடா பாட்டில் பேச்சுக்கு ஆண்டாளிடம் மனிப்பு கேட்டதாக அறிவித்தார். இந்நிலையில் மீண்டும் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என உண்ணாரவிரத போராட்டத்தை அறிவித்தார். ஆனால் வைரமுத்துக்கு கொடுத்த கெடு முடிந்தும் அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவில்லை.
 
இந்நிலையில் திடீரென சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த ஜீயர் அவருக்கு ஆசீர்வாதம் வழங்கினார். தேமுதிக தலைமை அலுவலகம் வந்து விஜயகாந்தை சந்தித்த அவர், நீங்கள் நினைத்தது எல்லாம் விரைவில் நடக்கும் என கூறியுள்ளார்.