புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (11:55 IST)

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக நா.புகழேந்தி போட்டி

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் நா.புகழேந்தி திமுக சார்பாக போடியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சற்று முன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்ட மத்திய மாவட்ட பொருளாளர் நா.புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

66 வயதான நா.புகழேந்தி 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராகவும், 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போதே விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டவர் எனபது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் விவசாயம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.