வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:43 IST)

பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை மீது கருப்பு மை பூசி அழிப்பு!

சென்னையில் பெரியார் பெயர் கொண்ட சாலையின் பெயரை மாற்றியதாக வெளியான நிலையில் இப்போது அந்த பலகையில் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முத்துசாமி பாலத்தில் தொடங்கி மதுரவாயல் சந்திப்பு வரை தொடரும் 14 கிமீ நீளமுள்ள பிரதான சாலை பெரியார் ஈ.வே.ரா சாலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னையின் முக்கிய பிரதான சாலையான இந்த சாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி பெரியார் ஈ.வே.ரா சாலை Grand Western Trunk Road என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது.