வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:18 IST)

பிரபல நடிகர் கொரொனாவால் உயிரிழப்பு… ரசிகர்கள் அதிர்ச்சி

கொரோனா தொற்றால் பிரபல நடிகரும் அம்பேத்காரிய செயற்பாட்டாளருமான வீரா சதிதார் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள்  முதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில்,  கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் கோர்ட். இப்படத்தில் நாராயணன் காம்ப்ளே என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் வீரா சதிதார்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், அம்பேத்காரிய இயக்கங்களிலும் இந்திய மக்கள் நாடக சங்கத்திலும் இணைந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் நாக்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிதார், இன்று கிசிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.