1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 டிசம்பர் 2021 (11:07 IST)

கப்பல்ல வேல வாங்கி தர்றோம்… 48 இளைஞர்களை ஏமாற்றிய இருவர்!

சென்னையில் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி இருவர் இளைஞர்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

சென்னையை சேர்ந்த ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரும் நுங்கம்பாக்கத்துல் குட்லீப் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர். மேலும் தங்கள் நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் உள்ள சொகுசு கப்பலில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கித் தரப்படும் என விளம்பரம் கொடுத்துள்ளனர்.

இதை நம்பி 48 இளைஞர்கள் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். அவர்களில் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலிஸார் விசாரணை நடத்தி பூந்தமல்லியில் தலைமறைவாக இருந்த ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.