தொடர்புடைய செய்திகள்
- செங்கல்பட்டு அருகே 2 மாடி பள்ளிக்கட்டிடம் இடிந்தது: பெரும் பரபரப்பு
- கோவையில் பஸ் ஸ்டாண்ட், நாகையில் பஸ் டிப்போ: இடிந்து விழும் அபாயங்கள்
- 4000 அடி பள்ளத்தில் விழுந்து ஒருவர் பலி எதிரொலி: கோவிலை சுற்றி வர தடை
- நாமக்கல்லில் அதிர்ச்சி: ஆசிரியர் அடித்ததில் மாணவன் முளைச்சாவு?
- பேருந்து நிலையத்திற்கு முட்டு கொடுக்கும் திட்டம் - வைரல் புகைப்படம்
கனமழை எதிரொலி: நாமக்கல் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்தது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிதல், ஏரிகள் உடைந்ததால் ஊருக்குள் நீர் புகுதல், பழைய கட்டிடங்கள் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் நாமக்கல் பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கூரை சற்றுமுன்னர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த கடைகள் மற்றும் கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது.
