திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (11:57 IST)

சிரிக்க சிரிக்க பேசி.. சிட்டாய் பறந்த மாப்பிள்ளை! – மணமகள் அதிர்ச்சி!

நாகர்கோவிலில் நடக்கவிருந்த திருமணம் ஒன்றில் கடைசி மணி நேரத்தில் மணமகன் மண்டபத்தை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இளைஞருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் பொறியாளருக்கும் திருமணம் செய்து வைக்க இருவரது பெற்றோரும் பேசி முடித்துள்ளனர். இருவரும் இதற்கு சம்மதிக்கவே தடல்புடலாக நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த 26 அன்று திருமணம் நடத்துவதாக முடிவாகி பத்திரிக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவசர வேலை இருப்பதாக சொல்லி மண்டபத்தை விட்டு வெளியே சென்ற மணமகன் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. இதனால் பதட்டமடைந்த பெண் வீட்டார் மற்றும் உறவினர் மணமகனை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்த திருமணம் பிடிக்காமல் ஓடிவிட்டதுமாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணம் வரை காத்திருந்து மணமகன் ஓடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.