1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2020 (18:34 IST)

புயலும் அவ்ளோ வேகம் இல்ல.. உஷாரா இருந்ததால பிரச்சினை இல்ல! – புயல் குறித்து முதல்வர் விளக்கம்!

வங்க கடலில் உருவான நிவர் புயல் கடலூர் அருகே கரையை கடந்த நிலையில் சேதாரங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி புயல் குறித்து விளக்கமளித்துள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறிய நிலையில் அதற்கு நிவர் என பெயரிடப்பட்டது. தீவிர புயலாக உருவெடுத்த நிவர் கரையை தொடும் முன்னர் அதி தீவிர புயலாக மாறி மணிக்கு 145 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது. இதனால் பல இடங்களில் வீடுகள் சேதாரமடைந்துள்ளதுடன், ஏகபட்ட மரங்களும் சாய்ந்துள்ளன.

இந்நிலையில் இன்று புயல் பாதிக்கப்பட்ட காரைக்கால் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசின் அறிவிப்புகள் மற்றும் அறிவுறுத்தல்களை உடனடியாக மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கைகள் மற்றும் அவசர காலத்தில் அல்லும் பகலும் உழைத்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் புயல் குறித்து பேசிய அவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் அடிப்படையில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், புயல் பெரும் தாக்கம் ஏற்படுத்தாமல் வலுவிழந்து கரையை கடந்தாலும், அரசின் நடவடிக்கையால் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த விவரங்களை திரட்டவும். நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.