1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (10:36 IST)

ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்த போலீஸ்! – தூக்கியடித்த எஸ்.பி!

Ramp walk
மயிலாடுதுறையில் அழகு போட்டி ஒன்றில் ராம்ப் வாக் செய்த போலீஸார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை செம்பனார்கோவில் பகுதியில் தனியார் அமைப்பு நடத்திய அழகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை யாஷிகா அனந்த கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விதவிதமான பேஷன் ஆடைகளில் மேடைகளில் ராம்ப் வாக் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 பேர் கொண்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களும் அந்த ராம்ப் வாக் நிகழ்ச்சியில் “தெறி” பாடல் ஒலிக்க காவல் உடையுடனே ராம்ப் வாக் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில் நாகப்பட்டிணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ராம்ப் வாக் செய்த காவலர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.