வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (14:36 IST)

மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஃபேஷன் ஷோ!!

ஆவடி சிஆர்பிஎப் மற்றும் Dhiman Divyanga டிரஸ்ட் இணைந்து நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. 

 
ஆவடி சிஆர்பிஎப் கிரவுண்டில் மாற்றுத்திறனாளிகளை ஊக்கிவிக்கும் வகையில் நடைபெற்ற ஸ்பெஷல் ஃபேஷன் ஷோவில் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா மற்றும் மெரசல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அக்ஸ்த் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் சுமார் 50 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் சிஆர்பிஎஃப் வில் பணிபுரியும் அதிகாரிகளின் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளும் பங்கேற்றனர். 
 
தேசிய அளவில் நடைபெற்ற வீல்சேர் கூடைப்பந்து மற்றும் பாரா ஒலிம்பிகக்கில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் மும்பையிலிருந்து வந்த மாடல் அழகிகளுடன் ராம்ப் வாக் செய்தது பார்வையாளர்களை கண்ணை கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற சம்யுக்தா மாற்றுத்திறனாளிகளுடன் ராம்ப் வாக்  செய்து ஊக்குவித்தார். 
பின்னர்  பேசிய அவர் 'சக மனிதர்களாக மதித்து மாற்றுத்திறனாளை ஊக்கம் அளிக்கப்படுத்தி.. இதுபோன்று பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்' சாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு பண்டிச்சேரி to கடலூர் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீட்டர் வரை தனது கைகளை மட்டும் பயன்படுத்தி நீச்சல் அடித்து சாதனை படைத்த ஸ்ரீ ராம் கலந்துகொண்டு மும்பை அழகிகளுடன் ராம்ப் வாக் செய்தார். தொடர்ந்து 25.30 மணி நேரம் பேஷன் ஷோ நடத்தி கின்னஸ் சாதனை படைத்த ஷோபானா திமான்  ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோ  மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள், குழந்தைகள் வைத்து 100வது ஃபேஷன் ஷோவாக வெற்றிகரமாக இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார்.
இந்த ஷோவில் மெர்சல் படத்தில் குழந்தை நட்சத்திரம் அக்ஸ்த் (Akshat) கலந்து கொண்டு குழந்தைகளுடன் Cat walk செய்தார். தேசிய அளவில் Basketball பேஸ்கட்பால் சாதித்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்து கொண்டு ram walk செய்தனர்.  இவர்களுக்கு கௌரவ விருதுகள் வழங்கப்பட்டது. 
 
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆவடி சிஆர்பிஎப் DIG தினகரன் மற்றும் திரு சிராஜுதின்(International Relationship director of ministry of Cambodia), நடிகை சம்யுக்தா, ராம்தாஸ் ( Ex MP & MLA ), சோபனா திமான் ( GUINNESS WORLD RECORD HOLDER show director & founder trustee of DHIMAN TRUST), தமிழ் செல்வி ( Medical advisor for Paralympic wheelchair volleyball association) ஆகியோர் கலந்து கொண்டனர்.