வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (10:45 IST)

கை விடாத நம்பிக்கை; கைகள் இல்லாமலே தேர்வெழுதி சாதித்த மாணவி!

SSLC
நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கைகள் இல்லாமலே மாணவி ஒருவர் தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்திருந்தனர். மேலும் பலர் பல பாடங்களிலும் 100க்கு 100 எடுத்து சாதனை படைத்தனர்.

இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கைகள் இல்லாமலே தேர்வு எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி லட்சுமி பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவர். இதனால் அவரது பெற்றோர் அவரை கைவிட்ட நிலையில் தனது 2 வயது முதலே ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்து வந்துள்ளார் லட்சுமி.

அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த லட்சுமி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தனது பாடங்களை வாயால் சொல்லியே தேர்வை எழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.