ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 மே 2024 (19:14 IST)

உண்மையா அக்கறை இருந்தா போன் பண்ணியிருக்கலாமே?! – பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பதில்!

Naveen Patnaik
சமீபத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றிவிட்டதாக பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு நவீன் பட்நாயக் பதில் அளித்துள்ளார்.



ஒடிசாவில் முதலமைச்சராக நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார். தற்போது மக்களவை தேர்தலுக்காக ஒடிசாவில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர்களான பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் தொடர்ந்து நவீன் பட்நாயக் அரசை விமர்சித்து வருவதுடன், தமிழகத்தை சேர்ந்த கே.சி.பாண்டியன் தான் முதல்வரை கைப்பாவையாக இயக்குவதாகவும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தனர்.

இந்நிலையில் சமீபமாக நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குன்றி விட்டதாகவும், கடந்த ஓராண்டாக அவருக்கு தெரிந்தவர்கள் அவரது உடல்நிலை குறித்து கவலைக் கொள்வதாகவும் பேசியிருந்தார். மேலும் அவரது உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின்னால் சிலரின் சதி இருக்கலாம் எனவும் பேசியிருந்தார்.


இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதில் அளித்து பேசியுள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தான் பூரண நலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக தேர்தல் பரப்புரையிலும் தான் ஈடுபட்டு வருவதாகவும், பிரதமர் மோடிக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால் எனக்கு போன் செய்து விசாரித்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K