1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2026 (09:13 IST)

15 வருஷம் கத்தியும் ஒருசீட் கூட இல்லையா?.. ஒரு கருத்துக்கணிப்பில் கூட வரலயே!...

seeman
திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். 15 வருடங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியை துவங்கி திராவிட கட்சிகளுக்கு எதிராக பேச துவங்கினார். திராவிடம் எங்களுக்கு வேண்டாம். தமிழ் தேசியம்தான் வேண்டும் என தொடர்ந்து முழங்கி வருகிறார். தேர்தல் பிரச்சாரங்களில் திராவிட கட்சிகளை போல இலவசங்கள் கொடுப்பதாக சொல்லமாட்டேன். இலவங்கள் வேண்டாம் என சொல்லுமளவுக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவேன் என சொல்லியிருந்தார்.

திராவிட கட்சிகளை பிடிக்காத இளைஞர்கள் சீமான ஆதரித்தார்கள். நாம் தமிழர் கட்சிக்கு படிப்படியாக வாக்கு வங்கி அதிகரித்து கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை அக்கட்சி பெற்றது. சுமார் 35 லட்சம் பேர் அந்த கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில்தான், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியானது. அதில், திமுகவே மீண்டு ஆட்சி அமைக்கும் என NDTV, REPUBLIC, PEOPLE INSIGHTS, சாணக்யா,  People's Pulse , MATRIZE, பி மார்க் ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் சொன்னது.

ஆனால், ஜேசிவி டைம்ஸ் நவ் சி.என்.என். நியூஸ் 18 தினத்தந்தி ஆகியவை தமிழகத்தில் இந்தமுறை அதிமுக ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.

அதேநேரம், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் மட்டும் சொல்லப்பட்டிருந்தது. து. தவெக 98 முதல் 120 இடங்களில் வெற்றி பெறும் எனவும், திமுக 92 முதல் 110 தொகுதிகளை பிடிக்கும்  எனவும், அதிமுக 22 முதல் 32 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றிபெறாது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒரு கருத்துக்கணிப்பில் கூட நாம் தமிழர் கட்சி இத்தனை தொகுதிகளை பிடிக்கும் என சொல்லவில்லை. இதையடுத்து சீமான் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற மாட்டார் என தவெகவினர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், காரக்குடி தொகுதியில் சீமான் தோற்பார் எனவும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். விஜயை சீமான், சாட்டை துரை முருகன் போன்றவர்கள் தொடர்ந்து திட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.