வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:05 IST)

நீட் தேர்வு அவசியமற்றது - சீமான் பேட்டி!

நீட் தேர்வு அவசியமற்றது - சீமான் பேட்டி!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நீட் தேர்வு அவசியமற்றது என தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுனருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு அவசியமற்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்காக அரசியல் கட்சிகள் தீவர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பாக அமையவில்லை. நீட் தேர்வு அவசியமற்றது என்று குறிப்பிட்டார்.