மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு பரபரப்பு காட்சிகள்
கரூரில் அமைச்சரின் கரூரில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்திற்கு தீ வைப்பு பரபரப்பு காட்சிகள்
கரூர் மாவட்டம், பண்டரிநாதன் நாதன் கோயில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல்,இவரது வீட்டின் முன்பு, எப்போதும் போல் இருசக்கர வாகனத்தினை நிறுத்தி வைத்து விட்டு, பின் தூங்க சென்ற நிலையில், திடீரென்று வந்த ஒருவர் பெட்ரோல் ஊற்றி அவரது வாகனத்தில் வைத்து தீ வைத்து சென்றுள்ளான். எதற்காக தீ வைத்தான், முன்பகையா ? தொழில் விரோதமா ? என்கின்ற காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வரும் நிலையில் கரூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற இந்த தீ விபத்து காட்சிகளின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. மேலும், இரவு நேர ரோந்து வாகன கண்காணிப்பு கரூர் மாநகரில் உள்ளதா ? என்றும், புதிதாக பொறுப்பேற்றுள்ள கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா ? என்பது சமூக நல ஆர்வலர்களின் ஒட்டு மொத்த கருத்தாகும். கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் மர்மநபர்கள் 2 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.