திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (19:45 IST)

4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் போகும்போது ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசு

நாடு முழுவதும் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள்  இருசக்கர வாகனத்தில் போகும்போது ஹெல்மெட் அணிய வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அறிவித்துள்ளதாவது:

நாட்டில் 4 வயதிற்குட்ட குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் செல்லும்பபோது, கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லவேண்டும் எனவும் இந்த அறிவிப்பு வெளியான ஒரு ஆண்டிற்குப் பிறகு இதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகும் என  மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும், இருசக்கரவாகனத்தில் குழந்தைகள் அமர்ந்து பயணிக்கும்போது, 40கிமீ வேகத்திற்கு மேல் வாகனத்தை இயக்கக்கூடாது என எச்சரித்துள்ளது.