வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2022 (12:08 IST)

16 இடங்களில் பெட்ரோல் குண்டு – மர்ம கடிதத்தால் பரபரப்பு!

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு.


பொள்ளாச்சியில் உள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என எழுதப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என SDPI குமரன் நகர்  - PFI குமரன் நகர் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. காவல் நிலையத்திற்கு வந்த இந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கடிதத்தை  அனுப்பிய மர்ம நபர்கள் யார் என குறித்தும் குறிப்பாக தற்போதுள்ள சூழ்நிலையை வேறு யாரும் தவறுதலாக பயன்படுத்தி திசை திருப்பும் நோக்கில் பண்ணுகின்றார்களா என்ற கோணத்தில்  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.