திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (21:48 IST)

ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு: 27 வயது இளைஞர் பலி!

gym
ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மாரடைப்பு: 27 வயது இளைஞர் பலி!
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக 27 வயது இளைஞர் பரிதாபமாக பலியாகி உள்ளார் 
 
மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவிஷ்ணு. 27 வயதான இவர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்து வருகிறார்
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜிம்மில் 100 கிலோவுக்கு மேல் எடை தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிகிறது.
 
வயதுக்கு ஏற்ப எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வயதுக்கு அதிகமான எடையை தூக்கினால் இது போன்ற ஆபத்துகள் வர வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் கருத்து கூறியுள்ளனர்