செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (11:51 IST)

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியார் கொலை.! நாடகமாடிய மருமகள் கைது..!!

crime
கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காசம்மாள் (70). வீட்டில் தனியாக வசித்து வந்த இவர், ஜூலை 8ம் தேதி  கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் நகைகள் என மொத்தம் 65 பவுன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.  நகைக்காக கொலை நடைபெற்றதாக போலீசார் வழக்குப்பதிவு  விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இதனிடையே சந்தேகத்தின் அடிப்படையில் மருமகள் சுதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். கேபிள் டிவி ஆபரேட்டர் பாக்கியராஜிக்கும் சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாமியார் மருமகளை கண்டித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.
 
இதுதொடர்பாக மருமகள் நடத்தை குறித்து அப்பகுதி மக்களிடம் மாமியார் காசம்மாள் கூறியுள்ளார். இதை அவமானமாக எண்ணிய சுதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து காசம்மாளை திட்டமிட்டு கொலை செய்துள்ளார். சம்பவத்தன்றே சுதாவின் செல்போனை ஆய்வு செய்த போது பாக்கியராஜிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

 
சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தபோது இருவரும் அவமானம் தாங்காமல் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.