தொடர்புடைய செய்திகள்
- பசியால் அழுத குழந்தைகள்.. துள்ளத் துடிக்க கொன்ற கொடூர தாய்!
- சித்தியை அனுபவிக்க முயன்ற சிறுவன்.. மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை!
- ஜிம் ட்ரெய்னருடன் உல்லாசம்.. கண்டுபிடித்த கணவரை கச்சிதமாக ப்ளான் செய்து முடித்த மனைவி! 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய சம்பவம்!
- அத்தையுடன் அத்துமீறிய உறவு.. உல்லாசத்தில் இருந்தபோது நடந்த கொடூரம்! – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
- தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவன்! அடித்து உரித்த மனைவி, மாமியார்!
மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதற்காக மனைவியும், மாமியாரும் சேர்ந்து கணவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தொழுவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவருக்கும் அத்தியூரை சேர்ந்த சுகந்தி (30) என்பவருக்கும் சில ஆண்டுகள் முன்னதாக திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அரிதாகவே சொந்த ஊருக்கு வந்து செல்வதுண்டு.
இந்நிலையில் சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இது வெளிநாட்டில் வேலைபார்க்கும் பிரபுவுக்கு அரசல் புரசலாக சென்று சேர்ந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாடு திரும்பிய பிரபு, இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது தாய், தந்தை, சகோதரன் என எல்லாரையும் திரட்டிக் கொண்டு வந்து பிரபுவை சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபுவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரபுவின் மனைவி சுகந்தி மற்றும் மாமியார் சுமதியை கைது செய்துள்ளனர். தலைமறைவான பிரபுவின் மாமனாரையும், மச்சானையும் தேடி வருகின்றனர். கள்ளக்காதலை தட்டிக் கேட்டதற்காக கணவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K
