திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2024 (10:07 IST)

கள்ள உறவை கைவிட மறுத்த மனைவி! ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற கணவன்!

கள்ளக்குறிச்சியில் கள்ள உறவில் இருந்த மனைவி அதை கைவிட மறுத்ததால் கணவன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குறும்பூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (33). இவருக்கும் கடலூரை சேர்ந்த தெய்வானை (28) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக வீரமணியும், தெய்வானையும் கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். அப்போது தெய்வானைக்கு அப்பகுதியை சேர்ந்த மலையாளி நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய நிலையில் இது வீரமணிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் வீரமணி தன் மனைவியை கண்டித்ததுடன் அவரை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பி விட்டார்.
 

சொந்த ஊருக்கு வந்த பின்னரும் தெய்வானை ரகசியமாக அந்த கேரள ஆணுடன் போனில் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்படி பேசும்போது பார்த்துவிட்ட வீரமணி ஆத்திரத்தை தெய்வானையை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் வீரமணியும் அவரது சகோதரரும், தெய்வானை தூக்கி போட்டுக் கொண்டதாக சொல்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் தெய்வானை உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீஸுக்கு தகவல் சொல்லியுள்ளனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தெய்வானையை கொன்றதை வீரமணி ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K