ராமதாஸ் மறந்த, மறைத்த சிலதை கிளறும் முரசொலி!!

murasoli
Sugapriya Prakash| Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (12:59 IST)
ஸ்டாலின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னியர்களுக்காக பேசியது முதலே ராமதாஸுடனான மோதல் போக்கு துவங்கிவிட்டது. 
 
விக்கிரவாண்டு மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பிரச்சாரத்தின் போது தலைவர் ஸ்டாலின், வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தனி ஒதுக்கீடும், மறைந்த வன்னிய தலைவர் கோவிந்தராஜுக்கு மணிமண்டம் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தார். 
 
இதனை தலைவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அன்று முதல் திமுக - பாமக இடையேயான மோதல் போக்கு துவங்கியது. இந்த பிரச்சனை முடிவுக்கு வருவதற்கு, ஸ்டாலின் அசுரன் படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டினார். 
இதனை கண்ட ராமதாஸ் பதிலுக்கு முரசொலி அலுவலகமே பஞ்சமி நிலத்தில்தான் உள்ளது என ஒரே போடாய் போட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஸ்டாலின் முரசொலி நிலத்தின் பத்திர புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டார். இருப்பினும் இந்த வாதங்கள் ஓயாமல் மாறி மாறி தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. 
 
இந்நிலையில் இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக பதிலடி கொடுக்கும் வகையில் முரசொலியில் தினமும் மறந்து போச்சா மருத்துவரே என்ற தலைப்பில் ராமதாஸ் அளித்த வாக்குறுதிகளை சுட்டிகாட்டி செய்தி வெளியாகி வருகிறது. 
 
ஒரு தொடராக வெளியாகும் இந்த செய்தியில் ராமதாஸ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மறந்து போய் மறைத்து வைத்துள்ள அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது முரசொலி. 


இதில் மேலும் படிக்கவும் :