செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (16:42 IST)

'தம்' அடிக்காத, 'மது' குடிக்காத கிராமம் : ஸ்டாலின்பெருமிதம் ! ஓட்டுக்காக ’ஐஸ் ’ஆ... கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் வரும், அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அனைத்துக் கட்சியினரும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள ஏழு சொம்பின் ஊராட்சியில் மக்கள் யாரும் புகைப் பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. ஒரு கிராமமே எப்படி இத்தனை கட்டுக் கோப்புடன் இருக்கிறது என ஆச்சர்யமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், இத்தனை நாட்களாக ஊரில் உள்ள மக்கள் இப்படித்தான் உள்ளனர். ஆனால் இன்றைக்குத்தான் இந்த உண்மைதெரிந்தது போன்று ஸ்டாலின் பேசியுள்ளார் என நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும், தேர்தல் காலத்தில் ஓட்டுக்கேட்ட வரும்போதுதான்,இந்த மாதிரி நல்ல விசயங்களை எல்லாம் பேசி பப்ளிசிட்டி செய்வார்களோ ? ஆனால் மற்ற நேரங்களின் ஏன் இதுபற்றி  பேசுவதில்லை என நெட்டிசன்ஸ்கள் கலாய்த்து வருகின்றனர்.