செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:42 IST)

நாங்க இருக்கும் வரை ஸ்டாலின் முதல்வராக முடியாது! – முரளிதர ராவ்

பாஜக இருக்கும் வரை ஸ்டாலினால் முதல்வராக முடியாது என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் பேசியுள்ளார்.

சென்னையில் பாஜக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் குடியுரிமை சட்டம் குறித்து பேசினார். அப்போது அவர் ”ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சொல்லி தற்போது குரல் கொடுக்கும் ஸ்டாலின், காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி செய்தபோது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்தபோது என்ன செய்தார்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்றும், பாஜக இருக்கும்வரை தமிழகத்தில் ஸ்டாலினால் ஆட்சியமைக்க முடியாது என்றும் பேசியுள்ளார்.