1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (09:24 IST)

கடலில் சிக்கிய அபூர்வ எலிப்பூச்சி! – சமைத்து சாப்பிட்ட மீனவர்!

எலிப்பூச்சி
புதுச்சேரியில் மீனவர் ஒருவர் வலையில் அபூர்வ எலிப்பூச்சி சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வலையில் அவ்வப்போது அதிசயமான பொருட்கள், உயிரினங்கள் சிக்கும். சமீபத்தில் புதுச்சேரி மீனவர் கலைஞானம் என்பவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது வலையில் எலிப்பூச்சி எனப்படும் அபூர்வ உயிரினம் சிக்கியுள்ளது.

பார்ப்பதற்கு நண்டு போல தெரியும் இந்த எலிப்பூச்சி வழக்கமாக 10 முதல் 50 கிராம் வரை மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் கலைஞானம் வலையில் சிக்கிய எலிப்பூச்சி ஒரு கிலோ எடை இருந்ததாம். இந்த எலிப்பூச்சி மருத்துவ குணம் உடையது என்பதாலும், அபூர்வமாகவே கிடைக்கும் என்பதாலும் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எனினும் கலைஞானம் இதை விற்காமல் குடும்பத்தோடு சமைத்து சாப்பிட்டுவிட்டாராம்!