திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 3 ஜூன் 2024 (18:09 IST)

முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசைக் கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்!

காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில்,முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து, மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில்  விவசாயிகள் ஈடுபட்டனர்.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை தட்டிக் கேட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி பேரணியாக வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.