வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , புதன், 22 மே 2024 (14:01 IST)

கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டதாக அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

தேனி அல்லிநகரம் போலீசார் கடந்த மாதம் வாகன சோதனை  நடத்திய போது  கஞ்சா வைத்திருந்ததாக கூறி தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முத்தையா, கிருஷ்ணபாண்டி, ஜீவராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்கள் மூன்று பேர்  மீதும்  அல்லிநகரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
 
இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு மூவரையும் கைது செய்யப்பட்டதாக கூறி இன்று தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யாமல்   ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த  இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாக கூறி தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபனை கண்டித்தும் அல்லிநகரம் காவல் ஆய்வாளர் கண்மணி  மற்றும் சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள்  உள்ளிட்டோரை  கண்டித்து அல்லிநகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
அப்போது போராட்டக்காரர்களை  தடுத்து நிறுத்தி  காவல்துறையினர் நிறுத்து வைத்திருந்த வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இதில் போராட்டத்தில் ஈடுபட்ட வயதான ஒருவர் மயக்கம் அடைந்ததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலைய அலுவலக வாயில் முன்பும் சாலையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
பின்னர் மயக்கம் அடைந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.