வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: தேனி , வியாழன், 9 மே 2024 (14:22 IST)

டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!

தேனி மாவட்டம், போடி தாலுகா, பூரிபுரம் பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை எண் 8612 செயல்பட்டு வரக்கூடிய மதுபான கடையை மூடக்கோரி பூதிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
தேனி - பூதிபுரம் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
 
இந்த மதுபான கடை அருகே ஆரம்ப சுகாதார நிலையம்,
குடியிருப்புகள், கோவில், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் தொழில் சாலை, உள்ளிட்டவைகள் இருக்கிறது.
 
அரசு மதுபான கடை மற்றும் பார் செயல்படுவதால் குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை நடுரோட்டில் உடைத்து விடுவதோடு, சாலையில் வாகனங்களை மறித்து நிறுத்தி விடுகின்றனர்.
 
இதனால் அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளுக்கு அவசர காலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல முடியாமல், 2 கிலோ மீட்டர் சுற்றி  செல்கின்றனர்.
 
ஆரம்ப சுகாதாரத்துக்கு வந்த கர்ப்பிணி பெண் மீது மது பாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய மது கடையை எட்டு வாரங்களில் மூடவேண்டும் என உத்தரவிட்டது.
 
இதனால் தொடர்ந்து அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
 
எனவே இந்த கடையை மூட வேண்டும் என பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
 
பின்னர் பேரூராட்சி தலைவர் கவியரசு மற்றும் செயல் அலுவலர் சிவகுமார் இருவரிடமும் பெண்கள் மது கடையை மூடக்கோரி மனு அளித்தனர்.
 
மதுக்கடையை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்.