1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MR vijayabaskar says about by election and vijay

டிசம்பர் மாதத்திற்குள் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. விஜய்யை யாராலும் அசைக்கமுடியாது: விஜயபாஸ்கர்

mr vijaya baskar
தமிழக அரசியலில் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கரூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எத்தனை கட்சிகள் கூட்டணி சேர்ந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் எப்படி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தாரோ, அதேபோல தளபதி விஜய் மக்கள் மனதில் நீடித்து நிலைத்து ஆட்சி செய்வார் என்றும், அவர் இருக்கும் வரை அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றும் விஜயபாஸ்கர் தனது உரையில் பாராட்டிப் பேசியுள்ளார். 
 
இந்த அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
 
 
Edited by Siva
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சபாநாயகர் ஆக்சன் சொல்றார்!. விஜய் பன்ச் வசனம் பேசுறார்!.. உதயநிதி அட்டாக்!...