1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin says vijay doing punch

சபாநாயகர் ஆக்சன் சொல்றார்!. விஜய் பன்ச் வசனம் பேசுறார்!.. உதயநிதி அட்டாக்!...

udhyanidhi vijay
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. தவெகவின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திமுக தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது.

இந்நிலையில்தான், திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘முன்பெல்லாம் சட்டசபையில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதில் சொல்வார்கள்.. ஆனால் இப்போதெல்லாம் நாங்கள் கேள்வி கேட்டால் தவெக உறுப்பினர்களும், அமைச்சர்களும் பாட்டு பாடுகிறார்கள்.. சபாநாயகரும் பாட்டு பாடுகிறார்... இது சட்டசபையா? இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா என்கிற சந்தேகமே எங்களுக்கு வருகிறது

நாங்கள் எந்த கேள்வி கேட்டாலும் முதலமைச்சர் விஜய் பேசுவதே இல்லை.. அவர் பேச ஆரம்பித்தால் பன்ச் வசனம் மட்டுமே.. அதுவும் எங்களை பார்த்து பேசுவதில்லை.. எங்கே கேமரா இருக்கிறதோ.. அங்கே பார்த்து சபாநாயகரிடம் அனுமதி வாங்கி.. அவர் ஆக்சன் சொன்னவுடன்.. விஜய் பன்ச் வசனம் பேசுகிறார்.. இதுதான் சட்டசபையில் நடக்கிறது’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஈரானுடன் போர்!. அமெரிக்காவின் மொத்த செலவு இவ்ளோ கோடியா?!..