செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (06:40 IST)

எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால்: அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பேட்டி

எனக்கோ என்னை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை தான் பொறுப்பு என தமிழக அமைச்சர் ஒருவரே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அதிகாலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் திடீரென பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டியில் எனக்கும் எனது கட்சியினருக்கும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையும் தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு என கூறியுள்ளார் 
 
தமிழகத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் காவல்துறைதான் பொறுப்பு என பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது