செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (18:30 IST)

கடைசி நாளில் 2 மணி நேரம் கூடுதலாக பிரச்சாரம் செய்ய அனுமதி: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக அதிகாலை முதல் நள்ளிரவு வரை பிரச்சாரம் செய்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஏப்ரல் 4ஆம் தேதி 5 மணியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதும் ஏப்ரல் ஐந்தாம் தேதி மக்கள் யோசிப்பதற்காக நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வெயில் கொளுத்தி வருவதால் 12 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்வதில்லை. இதனை கணக்கில்கொண்டு ஏப்ரல் 4ஆம் தேதி மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது