திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (17:04 IST)

ஆர்கே நகரில் வைத்திலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்: செருப்பை கழட்டி.....?

ஆர்கே நகர் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்தை அவரை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் செருப்பை கழட்டி அடிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
 
அதிமுக இரண்டாக உடைந்த போது சசிகலா அணியில் இருந்தார் மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம். பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த போது சசிகலா அணியில் இருந்து விலகி அவர்களுக்கு எதிராக செயல்பட்டார் வைத்திலிங்கம். வைத்திலிங்கம் சட்டமன்ற தேர்தலில் தோற்றநிலையிலும் அவர் சசிகலா சிபாரிசால் மாநிலங்களவை உறுப்பினரானார்.
 
ஆனால் வைத்திலிங்கம் தங்களுக்கு எதிராக திரும்பியதால் அவரை பதவியில் இருந்து நீக்கினார் தினகரன். இதனையடுத்து வைத்திலிங்கம் மற்றும் சசிகலா குடும்பத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ஆர்கே நகர் தேர்தலில் அதிமுகவின் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தார் வைத்திலிங்கம்.
 
ஆர்கே நகர் தொகுதியை சேர்ந்த எழில் நகரில் வைத்திலிங்கத்தின் ஊர்க்கார டீம் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை பார்த்திருக்கார். அந்த டீமில் தனது சொந்தக்காரர் ஒருவரை பார்த்த வைத்திலிங்கம், என்ன மச்சான், பிரஷர் குக்கருக்கா ஓட்டுக் கேக்கறே? பார்த்துக் கேளு, குக்கர் வெடிச்சிடப் போவுது என கிண்டலாக கூறியிருக்கிறார்.
 
இதனால் கோபமடைந்த அந்த நபர் தனது ஆதரவாளர்களை கூட்டிக்கொண்டு வந்து, வைத்திலிங்கத்தை ரவுண்டு கட்டி, நீ என்ன பெரிய இவனா? என செருப்பை கழட்டியிருக்கார். இதனை பார்த்து பதற்றமடைந்த கட்சிக்காரர் ஒருவர் குறுக்கே புகுந்து தடுத்துள்ளார். அந்த நபருக்கு சரியான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பெரிய விஷயமாக்கினால் தனக்கு தான் அவமானம் என வைத்திலிங்கம் அமைதியாக சென்றுவிட்டாராம்.