புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (11:30 IST)

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? – விரைவில் அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழலில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8ம் தேதிக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.