திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (10:37 IST)

செவிலியர்களோடு படம் பார்க்கும் விஜயகாந்த்! – நலமுடன் உள்ளதாக ட்வீட்!

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களக உடல்நலம் காரணமாக அரசியல் வெளியில் பங்கேற்காது இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சிகிச்சைகாக அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஜயகாந்த் “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.