மாமியாரிடம் சில்மிஷம்: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட மருமகன்
நாகை மாவட்டம் சீர்காழியில் பாலியல் தொல்லை கொடுத்த மருமகனை மாமியார் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியையடுத்த நாதல்படுகையை சேர்ந்தவர் கணேசன்(36). இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணேசன் தனது மனைவி ரம்யாவின் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட ரம்யாவை கணேசன் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரம்யா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் கணேசன் போதையில் தனது மாமியார் ஆண்டாள் வீட்டிற்கு சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பொறுத்து பொறுத்து பார்த்த ஆண்டாள், போதையில் இருந்த கணேசன் மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்தார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸார் ஆண்டாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.