புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 14 ஜனவரி 2019 (08:41 IST)

சொத்து வெறி: பெற்ற தந்தையை வீட்டிலிருந்து தூக்கியெறிந்த கொடூர மகள்

ஒசூரில் கேவலம் சொத்துக்காக பெற்ற தந்தையையே மகள் தூக்கியெறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூரை சேர்ந்த தனராஜ் என்பவர் காவல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆவார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்குமே திருமணம் ஆகிவிட்டது.
 
இந்நிலையில் தனராஜ் தனது வீட்டை மகள் தனலட்சுமிக்கு தானப்பத்திரமாக எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் நடைபெற்ற ஒரு சில பிரச்சனைகளால் மனம் மாறிய தனராஜ், அந்த வீட்டை மகளுக்கு பத்திரம் செய்துகொடுக்காமல், அதே வீட்டில் குடியேறினார்.
 
இதனால் ஆத்திரமடைந்த மகள் தனலட்சுமி அடியாட்களுடன் சென்று வீட்டிலிருந்த தந்தையை, தரதரவென இழுத்து வந்து வீதியில் வீசினார். இது பார்ப்போரை பதற வைத்த்து. என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கூட பெற்ற தந்தையை இப்படி செய்த கொடூர மகளுக்கும் நாளைக்கு இதே நிலைமை தான் வரும் என பலர் வேதனையுடன் தெரிவித்தனர்.
 
மேலும் இந்த கொடூர பெண்மணி மீது வழக்கு பதிந்து உச்சகட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.