திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (09:18 IST)

நர்சிங் மாணவிகளின் வெறியாட்டம்: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

மேற்குவங்க மாநிலத்தில் 2 நர்சிங் மாணவிகள் 16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் மருத்து கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயின்றுவரும் மாணவிகளுக்கு தனியாக ஹாஸ்டல் ஒன்று இருக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் பயின்று வரும் நர்சிங் மாணவிகள் இருவர் 16 நாய்க்குட்டிகளை ஓட ஓட விரட்டி அடித்து கொன்றும், விஷம் வைத்தும், சாக்கு மூட்டைகளில் அடைத்தும் கொலை செய்துள்ளனர். இது நிர்வாகத்திற்கு தெரியவரவே அவர்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
விரைந்து வந்த காவல் துறையினர் அந்த 2 ராட்சசிகளை கைது செய்தனர். இச்சம்பவத்திற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.