திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 ஜனவரி 2019 (10:17 IST)

காதல் ஆட்டம்: 16 வயது மகளின் தலையை துண்டித்த பெற்றோர்

பீகாரில் காதல் வயப்பட்ட 16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 16 வயது சிறுமி கானாமல் போனதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் புகாரைப் பெற்றுக்கொண்டு சிறுமியை தேட ஆரம்பித்தனர். அப்போது சிறுமி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
 
போலீஸாருக்கு சிறுமியின் பெற்றோர் மீது சந்தேகம் வரவே அவர்கள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். காதலனுடன் ஓடிப்போன பெண்ணை மீட்ட பெற்றோர் கோபத்தில் சிறுமியை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் சிறுமியின் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.