1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Most part of Chennai gets rain

சென்னையில் வெப்பதை தணித்த திடீர் மழை !

Chennai Rains
சென்னையில் பல் பகுதிகளில் வெயிலின் வெப்பத்தை தணிக்கும் அளவிற்கு திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி. 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் மழை பெய்ததால் வெயில் தணிந்த குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
 
அதிலும் இன்று காலை சென்னையில் கோடம்பாக்கம், தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், வில்லிவாக்கம், கொளத்தூர், வளசரவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இன்றும் உயர்ந்தது தங்கம் ... மீண்டும் 35,000 கடந்து விற்பனை!