ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2023 (18:05 IST)

மீண்டும் கோடை காலமா? தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு என அறிவிப்பு..!

தமிழகத்தில் கோடை காலம் தற்போது தான் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் இன்றும் நாளையும் 38 முதல் 40 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக  தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை அறிவிப்பி கூறப்பட்டு உள்ளது.  
 
ஜூலை 31ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva