ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (11:47 IST)

வட மாநிலங்களில் மழை நிலவரம்: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!

Rain
வட மாநிலங்களில் கலந்த சில நாட்களாக கன மழை பெய்து ஒருசில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் தற்போது  மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 
இமாச்சலப் பிரதேசம், மேகாலயா, கோவா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது,
 
மேலும் ஒடிஷா, கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான், அசாம் ஆகிய பகுதிகளில் இன்று கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்றும் இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran