ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (13:45 IST)

இன்று முதல் 7 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை: சென்னை வானிலை மையம் தகவல்..!

இன்று முதல் ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் லேசான மழை முதல் மிதமான மழை வரையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறியிருந்தது.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் ஏழு நாட்களுக்கு லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ காற்று கேரளா போன்ற மாநிலங்கள் தீவிரமாக இருக்கும் நிலையில் அதன் தாக்கம் தமிழகத்திலும் இருக்கும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 
 
இருப்பினும் கனமழை அதிக கனமழை தமிழகத்துக்கு இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை  பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva