1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (14:04 IST)

5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு எதிரொலி: தடை செய்யப்பட்ட பகுதியாக மூவரசம்பட்டு குளம் அறிவிப்பு

pond
நேற்று மூவரசம் பேட்டையில் 5 இளம் அர்ச்சகர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து அந்த குளத்தில் உள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை நங்கநல்லூர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது ஐந்து இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார் என்பதும் இதனை அடுத்து இன்று சட்டமன்றத்தில் மறைந்த அர்ச்சகர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மூவரசம்பட்டு கோயில் குளம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த குளம் நிர்வகிக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த குளத்தின் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran