1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (11:55 IST)

குளத்தில் உயிரிழந்த அர்சகர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் அன்பரசன்!

சென்னை மூவரசம்பட்டு கோவில் குளத்தில் மூழ்கி பலியான 5 அர்ச்சகர்கர்களின் பிரேதங்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லபட்ட நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரித்தனர் .
 
பின்னர் பேட்டியளித்த அமைச்சர் அன்பரசன், இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்க கூடியது என்றும், அறநிலைய துறை கட்டுபாட்டில் இல்லாத  தனியார் கோவில் இது என்றும் கூறிய அவர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்த முறையான அனுமதி பெற்றார்களா, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டதா என விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும்  முதல்வரிடம் ஆலோசித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கபடும் என்றார்.