வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (12:22 IST)

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான மத்திய அரசின் தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மீடியா ஒன் தொலைக்காட்சி மீது மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
தேச பாதுகாப்பு என்ற கோரிக்கையை பயன்படுத்தி குடிமக்களின் உரிமையை மறுக்கக்கூடாது என்றும் வலுவான ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரம் அவசியம் என்றும் மீடியா ஒன் தொலைக்காட்சி வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 
 
கேரளாவில் மீடியாவில் தொலைக்காட்சி மீதான மத்திய அரசின் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை அடுத்து ஒளிபரப்பு உரிமத்தை நிறுவனத்திற்கு வழங்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல பத்திரிகையாளர்கள் பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran