வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (18:23 IST)

தென்மேற்கு பருவ மழை தாமதம் ஆகும் ! வானிலை ஆய்வு மையம்

தென் மேற்கு பருவ மழை ஜூன் 8 ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  விவசாயிகள் தென் மேற்கு பருவ மழையை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 
தென்மேற்கு பருவமழை காலம் தான் இந்தியாவில் முக்கிய பங்காற்றக் கூடிய மழை காலமமாக கருதப்படுகிறது.  விவசாய உற்பத்திகள் பெருகுவதற்கு உதவக் கூடிய பருவமழை காலமும் இதுதான்.
 
வழக்கமாக தென் மேற்கு பருவமழை ஜுன் 1 ல் கேரளாவில் காலடி எடுத்துவைக்கும்.  ஆனால்,  இந்த முறை தென்மேற்கு பருவமழை கேரளாவிற்கு இன்னும் தொடங்கவில்லை..

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜுன் 8 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.